திரைப்படம் : தாம் தூம்
பாடலாசிரியர் : நா. முத்துக்குமார்
பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா
இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்
பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா
இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்
Movie: Dhaam Dhoom
Song: Anbe Enn Anbe
Cast: Jayam Ravi, Kangana Ranaut, Lakshmi Rai
Music: Harris Jayaraj
Singer: Harish Raghavendra.
Anbe En Anbe Song Lyrics in Tamilஅன்பே என் அன்பே | தாம் தூம்
—BGM—
ஆண் : அன்பே என் அன்பே உன் விழி பார்க்க…
இத்தனை நாளாய் தவித்தேன்…
—BGM—
ஆண் : கனவே கனவே கண் உறங்காமல்…
உலகம் முழுதாய் மறந்தேன்…
—BGM—
ஆண் : கண்ணில் சுடும் வெயில் காலம்…
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்…
அன்பில் அடை மழைக்காலம்…
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்…
—BGM—
ஆண் : நீ நீ ஒரு நதி அலை ஆனாய்…
நான் நான் அதில் விழும் இலை ஆனேன்…
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ…
உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ… ஓ…
ஆண் : மழையினிலே பிறக்கும் நதி…
கடலினிலே கலக்கும்…
மனதினிலே இருப்பதெல்லாம்…
மெளனத்திலே கலக்கும்…
ஆண் : அன்பே என் அன்பே உன் விழி பார்க்க…
இத்தனை நாளாய் தவித்தேன்…
கனவே கனவே கண் உறங்காமல்…
உலகம் முழுதாய் மறந்தேன்…
ஆண் : கண்ணில் சுடும் வெயில் காலம்…
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்…
அன்பில் அடை மழைக்காலம்…
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்…
—BGM—
ஆண் : நீ நீ புது கட்டளைகள் விதிக்க…
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க…
இந்த உலகத்தை ஜெயித்திடுவேனே…
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே…
ஆண் : எதைக் கொடுத்தோம் எதை எடுத்தோம்…
தெரியவில்லை கணக்கு…
எங்கு தொலைந்தோம் எங்கு கிடைத்தோம்…
புரியவில்லை நமக்கு…
ஆண் : அன்பே என் அன்பே உன் விழி பார்க்க…
—BGM—
ஆண் : கனவே கனவே கண் உறங்காமல்…
—BGM—
ஆண் : கண்ணில் சுடும் வெயில் காலம்…
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்…
அன்பில் அடை மழைக்காலம்…
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்…
—BGM—