கேரட்டை
மொத்தமாக வாங்கி வந்து விட்டு, சீக்கிரம் காய்ந்து போய் விட்டதே என்று
கவலைப்பட வேண்டாம். கேரட்டின் தோலை சீவி, அதன் நுனி மற்றும் அடி
பாகத்தை வெட்டிவிடுங்கள். இதனை ஒரு பிளாஸ்டிக் டாப்பபாவில் போட்டு
டைட்டாக மூடி ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால், வாரக்கணக்கில் கேரட்டுகள்
ஃப்ரெஷ்ஷஇருக்கும் .
உருளைக்கிழங்கு
சிப்ஸ் செய்யும்போது.. கடலை மாவு, உப்பு, மிளகாய்த்தூளை நீர்க்கக்
கரைத்து, அதில் தோல் சீவி நறுக்கிய உருளைக்கிழங்கை ஊற விடுங்கள். பிறகு
எடுத்து ஒரு மெல்லிய சுத்தமான துணியில் ஈரம் போக காயவிடுங்கள். இதை
எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், சிப்ஸ் மொறு மொறுவென்று
ருசியாக இருக்கும்.
சட்னிக்கு
அரைக்கும்போது முதலில் பொட்டுக் கடலை, பச்சைமிளகாய், உப்பு ஆகியவறறை
மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொண்டு, பிறகு தேங்காயை சேர்த்து
அரையுங்கள். உலர் நிலையில் உள்ள பொருட்கள் முதலிலேயே நன்றாக மசிந்து
விடுவதால், துவையல் போல கெட்டியாக அரையபடும். பிறகு், நமக்குத் தேவையானபடி
தணணீர் சேர்த்து நீர்க்கவோ, கெட்டியாகவோ சட்னி செய்து கொள்ளலாம்.
இந்திரா சந்திரன், திருச்சி- 1
மோர்
மிளகாயை தேவைக்கும் அதிகமாக வறுத்து. அது மிச்சமானால் மொறுமொறுப்பு
இன்றி நமுத்ததுப் போயிருக்கும், இதை, மிக்ஸியில் போட்டு தூள் செய்து
வைத்துக் கொள்ளுங்கள். இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள இந்த இன்ஸ்டன்ட்
மோர் மிளகாய்ப் பொடியில் சிறிது எண்ணெய் விட்டு சாப்பிடலாம். காரம்
அதிகம் இருந்தால், அதனுடன் நாலைந்து ஸ்பூன் பொட்டுக் கடலையை சேர்த்து
அரையுங்கள். சுவையும் மணமும் அபாரமாகஇருக்கும்.
மீனா ரெங்கநாதன், சென்னை- 33
பால்
பாயின்ட் பேனா திடீரென்று சரியாக எழுதாமல் மக்கா பண்ணுகிறதா? அதன் முனையை
கண்ணாடியில் சில நொடிகள் தேய்த்து விட்டு, எழுதுங்கள். நன்றாக எழுத
வரும்.
ஆர்.ராஜலட்சுமி, விழுப்புரம்
வி.விஜயராணி, திருப்பூர்
No comments:
Post a Comment