வைரமுத்து ஏஆர்.ரகுமான் மணிரத்னம் கூட்டணியில்...

மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா வைரமுத்து ஏஆர்.ரகுமான், மணிரத்னம் என மூன்று முத்துக்களை இணைத்து முதன்முதலில் அழகு பார்த்தது. அதன்பிறகு 26 ஆண்டுகளாய் பல முத்தான பாடல்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இப்போது இவர்களின் கூட்டணியில் செக்கச் சிவந்த வானம் திரைப்படம் வெளியாக உள்ளது.

26 வருடங்களாக இந்த அதிசயம் நிகழ்ந்துகொண்டே இருப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியத்தை வைரமுத்து உடைக்கிறார். அவர் சொல்லும் முக்கியமான காரணம் 'மரியாதை'. நாங்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுடைய கருத்துகளுக்கு மரியாதை அளிப்போம். முன்னால் மட்டுமே பேசுவோம் பின்னல் பேசமாட்டோம். ஒரு கலைப் படைப்பை தரமாக கொடுப்பதற்கான கல்வியறிவு எங்களிடம் உள்ளது. இதையெல்லாம் தாண்டி காலமாற்றத்திற்கு ஏற்றாற்போல் எங்களை நாங்கள் புதுப்பித்துக்கொள்கிறோம். ஏனென்றால் ஒரு கலை வடிவம் என்பது காலத்தின் உலியால் செதுக்கப்படுவது. எங்களுக்கு வயதாகிறது ஆனால் எங்களின் உள்ளம் இளைமையோடுதான் உள்ளது.

நான் இல்லாமல், மணிரத்னத்துடன் இணைந்து ரகுமானால் சிறந்த பாடலை கொடுக்க முடியும், அதேபோல் அவர்களில்லாமலும் என்னால் தனித்து செயல்பட முடியும். ஆனால், நாங்கள் மூவரும் ஒன்றிணையும்போது அந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. புதுமைக்கான சிறகு விரிகிறது. அதனால் வெற்றியும் பெரிதாகிறது என்கிறார் வைரமுத்து.
நமக்குள் இருக்கும் மாறுபட்ட கருத்துகள் ஒரு செயலை இன்னும் ஆழமாக சிந்தித்து சரியான பாதையில் செய்ய உதவும். இரண்டுபேர் இருந்தால் அங்கு இரு மூளைகள் உள்ளன. அப்போது இரண்டு விதமான சிந்தனைகள் இருக்கும். அதுவே மூன்றாகும்போது முடிவு சிறப்பாக இருக்கும். பாம்பே திரைப்படத்தில் உள்ள கண்ணாளனே பாடலில் எல்லா வார்த்தைகளும் அவர்களுக்கு பிடித்துவிட்டது. ஆனால், அப்பாடல் ஆரம்பிக்கும் வார்த்தையில் இருவருக்கும் திருப்தி இல்லை. கண்ணாளனே என்ற வார்த்தைக்கு பதிலாக என் ஜீவனே, என் நாதனே, என் தேவனே போன்ற பதினாறு வார்த்தைகளைக் கொடுத்தேன். அதில் எதுவுமே அவர்களுக்கு பிடிக்க வில்லை. அதன்பிறகுதான் கண்ணாளனே என்ற வார்த்தையை பயன்படுத்தினேன், அதை அவர்கள் மிகவும் ரசித்து ஏற்றுக்கொண்டனர். அந்த பாடல் ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்துப் போக ரகுமானை பாராட்டினார். எங்களுடைய கருத்து மோதல்கள் இப்படித்தான் இருக்கும்.

In English

How do you handle creative differences?

"Differences of opinion is what will lead to enhancement of ideas. When you have two persons, there will be two brains, which leads to two thoughts. And when there are two thoughts, there will be differences. It is like a man-woman relationship. But our differences do not arise out of our personalities, but out of our art. They will be about the song, the film, the tune, the language. So, we know where the ball is and where each other’s foot is. We don’t hit the other’s foot in that rush to hit the ball. Sometimes, it would be over the words or lines that the tune needs. For example, we had finalised every other word in the Kannaalane song (in Bombay) except for the word Kannaalane. It had to be a term representing a girl calling out her lover. I had given them about 16 options - En Jeevane, En Devane, En Naadhane, En Nanbane. But they weren’t happy with any of those. I was fed up, but they weren’t giving up. The word that I finally gave them was even older than these - Kannaalane - and ironically, they okayed it! The late chief minister Jayalalithaa had gone to Rahman’s studio from Fort to wish him on his marriage, and had requested him to play something that he had recently recorded. Rahman had played this song for her, and she had loved it.

No comments:

Post a Comment