நானும் அழகிதான்...

கிழிந்த ஆடையென்றாலும்
தைத்து தான் போட்டிருக்கிறேன்

கண்மை வாங்க காசில்லாவிட்டாலும்
அடுப்புக்கரியால் கண் கருப்பாகத்தான் தெறிகிறது

வெள்ளையாய்த் தெறியாவிட்டாலும்
மஞ்சள் முகத்தில் கலந்து தான் உள்ளது

கார்கூந்தல் கால்களைத் தொடும் போது
கால்க் கொழுசு தேவையில்லை எனக்கு

அம்மா போட்டு விட்ட இரட்டை  ஜடையில்
உங்களைப் போல் அலங்கரிக்க கூந்தலில்லை

வாய்க்கு நிறப்பூச்சு தேவையில்லை
வெற்றிலை போட்ட வெண்சிகப்பு போதுமெனக்கு

நகையென போட்டுக் கொள்ள ஏதுமில்லை
என் புன்னகைக்கு ஈடாக ஏதுமில்லை

நானும் அழகிதான்


No comments:

Post a Comment