இது ஒரு பொன்மாலை பொழுது பாடல் வரிகள்

எனக்கு பிடித்த பாடல்- இது ஒரு பொன்மாலை பொழுது...

படம் : நிழல்கள்
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை : இளையராஜா


ஹே ஹோ ம்ம்ம் லல லா…
பொன்மாலைப் பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்   (இது ஒரு ….)

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
இராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள்
சாமரங்கள்
வீசாதோ..   (இது ஒரு…)

வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒருநாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால்
வேள்விகளை
நான் செய்தேன்….    (இது ஒரு..)


இந்த பாடலில் விட்டு போன சரணம்
(விஜய் டிவி நிகழ்ச்சியில் வைரமுத்து பாடியது)

இரவும் பகலும் யோசிக்கிறேன்
என்னையே தினமும் போசிக்கிறேன்
சாலை மனிதரை வாசிக்கிறேன்
தீயின் சிவப்பை நேசிக்கிறேன்
பேதங்களே
வேதங்களா
கூடாது…     (இது ஒரு..)

No comments:

Post a Comment