சிங்களத்து சின்னக் குயிலே - புன்னகை மன்னன்

படம்: புன்னகை மன்னன் Punnagai Mannan
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள்: S.P.பாலசுப்பிரமணியம், சித்ரா

ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
கன்னம் வலிக்கும் கிள்ளாதே கல்லுளி மங்கா


சிங்களத்து சின்னக் குயிலே
எனக்கு ஒரு மந்திரத்த சொல்லு மயிலே   (சிங்களத்து)

ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா

அன்பே நீ இன்றி அலைகள் ஆடாது
கண்கள் சாய்ந்தாலும் இமைகள் மூடாது
பூவே நீ இன்றி பொழுதும் போகாது
காதல் இல்லாமல் கவிதை வாழாது
  
ஆதரிக்க நல்ல இளைஞன்
மனம் விட்டு காதலிக்க நல்ல கவிஞன்

காதலிக்க வந்த கலைஞன்
இவன் என்றும் தாவணிக்கு நல்ல தலைவன்

தடை ஏது தலைவா
இடை மேலே உடை நீயே
பூ மஞ்சம் நீ போட வா  

எனக்கென்ன சிங்களத்து சின்னக் குயில் நான்
உனக்கொரு மந்திரத்த சொல்லும் மயில் நான் 

சிங்களத்து சின்னக் குயில் நான்
உனக்கொரு மந்திரத்த சொல்லும் மயில் நான்  (ஜிங்கள ஜிங்கா)

நிலவே நான் தானா? நிஜமா? வீண் கேலி
உந்தன் மடி தானே நிலவின் நாற்காலி
ஒரு நாள் அமர்ந்தாலும் உலகில் நான் ராணி
காமன் பூச்சூடும் கலையில் நீ ஞானி

ஆத்திரத்தில் தொட்டு வைக்கிறேன்
இருக்கட்டும் ராத்திரிக்கு விட்டு வைக்கிறேன்

விட்டு விடு தத்தளிக்கிறேன்
என்னை விட்டு எட்டி நில்லு எச்சரிக்கிறேன்

பிடிவாதம் தகுமா
கொடி ஒன்று கனி ரெண்டு
வாங்காமல் தாங்காதம்மா

இசைதரும் சிங்களத்து சின்னக் குயிலே
எனக்கு ஒரு மந்திரத்த சொல்லு மயிலே (சிங்களத்து)

ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
கன்னம் வலிக்கும் கில்லாதே கல்லுளி மங்கா

ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா



No comments:

Post a Comment