Anbe Enn Anbe Video Song | Dhaam Dhoom

திரைப்படம் : தாம் தூம்
பாடலாசிரியர் : நா. முத்துக்குமார்
பாடகர் :  ஹரிஷ் ராகவேந்திரா
இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

Movie: Dhaam Dhoom 
Song: Anbe Enn Anbe
Cast: Jayam Ravi, Kangana Ranaut, Lakshmi Rai
Music: Harris Jayaraj 
Singer: Harish Raghavendra.


Anbe En Anbe Song Lyrics in Tamil
அன்பே என் அன்பே | தாம் தூம்


—BGM—

ஆண் : அன்பே என் அன்பே உன் விழி பார்க்க…
இத்தனை நாளாய் தவித்தேன்…

—BGM—

ஆண் : கனவே கனவே கண் உறங்காமல்…
உலகம் முழுதாய் மறந்தேன்…

—BGM—

ஆண் : கண்ணில் சுடும் வெயில் காலம்…
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்…
அன்பில் அடை மழைக்காலம்…
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்…

—BGM—

ஆண் : நீ நீ ஒரு நதி அலை ஆனாய்…
நான் நான் அதில் விழும் இலை ஆனேன்…
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ…
உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ… ஓ…
ஆண் : மழையினிலே பிறக்கும் நதி…
கடலினிலே கலக்கும்…
மனதினிலே இருப்பதெல்லாம்…
மெளனத்திலே கலக்கும்…
ஆண் : அன்பே என் அன்பே உன் விழி பார்க்க…
இத்தனை நாளாய் தவித்தேன்…
கனவே கனவே கண் உறங்காமல்…
உலகம் முழுதாய் மறந்தேன்…
ஆண் : கண்ணில் சுடும் வெயில் காலம்…
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்…
அன்பில் அடை மழைக்காலம்…
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்…

—BGM—

ஆண் : நீ நீ புது கட்டளைகள் விதிக்க…
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க…
இந்த உலகத்தை ஜெயித்திடுவேனே…
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே…

ஆண் : எதைக் கொடுத்தோம் எதை எடுத்தோம்…
தெரியவில்லை கணக்கு…
எங்கு தொலைந்தோம் எங்கு கிடைத்தோம்…
புரியவில்லை நமக்கு…
ஆண் : அன்பே என் அன்பே உன் விழி பார்க்க…

—BGM—

ஆண் : கனவே கனவே கண் உறங்காமல்…

—BGM—

ஆண் : கண்ணில் சுடும் வெயில் காலம்…
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்…
அன்பில் அடை மழைக்காலம்…
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்…

—BGM—

Mandram vandha thendralukku Lyrics in Tamil from Mouna Ragam (1986)

மன்றம் வந்த தென்றலுக்கு..... (மெளனராகம்) - பாடல் வரிகள்

ஆஆ ஆஆ

ஆஆ ஆஹா ஆஆ

ஆஆ ஆஆ ஆஹா

ஆஆ ஆஆ


மன்றம் வந்த

தென்றலுக்கு மஞ்சம்

வர நெஞ்சம் இல்லையோ

அன்பே என் அன்பே

தொட்டவுடன் சுட்டதென்ன

கட்டழகு வட்ட நிலவோ

கண்ணே என் கண்ணே

பூபாளமே கூடாதெனும்

வானம் உண்டோ சொல்

ஐயய்யோ ஐயய்யோ புடிச்சிருக்கு பாடல் வரிகள்

Ayyayo ayyayo Pudichirukku Lyrics

Movie Name : Saamy (2003) (சாமி)

Music : Harris Jayaraj

Singers : Hariharan, Mahathi

Lyrics : Na.Muthukumar

ஐயய்யோ ஐயய்யோ புடிச்சிருக்கு

உனக்கு என்னை புடிச்சிருக்கு 

என்னவோ என்னவோ புடிச்சிருக்கு 

எனக்கும் உன்னை புடிச்சிருக்கு


துணிச்சல் புடிச்சிருக்கு

உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு

வெகுளித்தனம்தான் புடிச்சிருக்கு

என்னை திருடும் பார்வை புடிச்சிருக்கு

புதிதாய் திருடும் திருடி எனக்கு 

முழுதாய் திருடத்தான் தெரியல  (ஐயய்யோ...)


வள்ளுவரின் குறளாய் 

ரெண்டு வரி இருக்கும்

உதட்டை புடிச்சிருக்கு


காதல் மடல் அருகே 

உதடுகள் நடத்தும்

நாடகம் புடிச்சிருக்கு


உன் மடிசார் மடிப்புகள் புடிச்சிருக்கு

அதில் குடித்தனம் நடத்திட புடிச்சிருக்கு


தினம் நீ கனவில் வருவதனால் 

ஐயோ தூக்கத்தை புடிச்சிருக்கு (ஐயய்யோ...)


காதல் வந்து நுழைந்தால்

போதி மர கிளையில் ஊஞ்சல்கட்டி 

புத்தன் ஆடுவான்


காதலிலே விழுந்தால்

கட்டபொம்மன் கூட

போர்களத்தில் பூக்கள் பறிப்பான்


காலையும் மாலையும் படிக்கும் உன்னை 

இன்று காதல் பாடங்கள் படிக்க வைத்தேன்

காவல்காரனாய் இருந்த உன்னை 

இன்று கள்வனாய் மாற்றி விட்டேன்


அடடா அடடா....

அடடா அடடா புடிச்சிருக்கு

உனக்கு என்னை புடிச்சிருக்கு

என்னவோ என்னவோ புடிச்சிருக்கு

எனக்கும் உன்னைதான் புடிச்சிருக்கு

துணிச்சல் கொஞ்சம் புடிச்சிருக்கு

உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு

வெகுளித்தனம்தான் புடிச்சிருக்கு

என்னை திருடும் பார்வை புடிச்சிருக்கு


புதிதாய் திருடும் திருடி எனக்கு 

முழுதாய் புடிச்சிருக்கு

Kadhala Kadhala Song Lyrics in Tamil - Avvai Shanmughi

 காதலா காதலா பாடல் வரிகள் - அவ்வை சண்முகி


Song : Kadhala Kadhala
Movie/Album Name : Avvai Shanmughi 1996
Singer : Hariharan and Sujatha
Music Composed by : Deva
Lyrics written by : Vaali

Vaa Vaa Anbe Anbe Song Lyrics


வா வா அன்பே அன்பே பாடல் வரிகள்

Movie Name : Agni Natchathiram (1988) - அக்னி நட்சத்திரம்

Music : Ilaiyaraaja

Singers :  K. J. Yesudas - K.S.Chithra, 

Lyrics : Vaali

வா வா அன்பே அன்பே

காதல் நெஞ்சே நெஞ்சே

உன் வண்ணம் உன் எண்ணம்

எல்லாமே என் சொந்தம்

இதயம் முழுதும் எனது வசம்

(வா வா..)

நீலம் கொண்ட கண்ணும்

மேகம் கொண்ட நெஞ்சும்

காலம்தோரும் என்னை சேறும் கண்மணி

பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்

மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மனி

காலை மாலை ராத்திரி

காதல் கொண்ட பூங்கொடி

ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்

காலை மாலை ராத்திரி

காதல் கொண்ட பூங்கொடி

ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்

நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே

நீ இன்றி ஏது பூ வைத்த மானே

இதயம் முழுதும் எனது வசம்

(வா வா..)

கண்ணன் வந்து கொஞ்சும்

கட்டில் இந்த நெஞ்சம்

காணல் அல்ல காதல் என்னும் காவியம்

அன்றும் இன்றும் என்றும்

உந்தன் கையில் தஞ்சம்

பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்

காற்றில் வாங்கும் மூச்சிலும்

கன்னி பேசும் பேச்சிலும்

நெஞ்சமானது எந்தன் தஞ்சமானது

காற்றில் வாங்கும் மூச்சிலும்

கன்னி பேசும் பேச்சிலும்

நெஞ்சமானது எந்தன் தஞ்சமானது

உன் தோளில் தானே பூமாலை நானே

சூடாமல் போனால் வாடாதோ மானே

இதயம் முழுதும் எனது வசம்

(வா வா..)