சக்கரையால் (வெள்ளை சீனி) உடல்நலக்கேடு

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகு...ம். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?

வல்லாரையும் அதன் பயன்களும்


வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது. கஷாயம், காசம், மேகம், போன்ற நோய்களைக் குணப்படுத்துவதில் வல்லாரை கீரை நிகரற்றது. இந்த கீரையை  பால் கலந்து அரைக்க வேண்டும். அரைக்கப்பட்ட விழுதை நெல்லிக்காய் அளவு திரட்டி உண்ண வேண்டும். இப்படி இந்த விழுதை தொடர்ந்து மாதக் கணக்கில் சாப்பிட்டு வந்தால் நரை மறைந்து இளமை தோற்றம் திரும்பும்.

நண்டு குழம்பு


தேவையான பொருட்கள் :
நண்டு - அரை கிலோ
சிறிய வெங்காயம்  - 100 கிராம்
தக்காளி  - 1
பூண்டு - 10 பல்
புளி - சிறிதளவு
வரமிளகாய்  - 25
மிளகு - 1 ஸ்பூன்
தேங்காய் - அரை முடி
மஞ்சள்தூள்  - சிறிதளவு
கசகசா - கால் ஸ்பூன்
எண்ணெய் - 5 ஸ்பூன்
உப்பு, கருவேப்பிலை - தேவையான அளவு
வெந்தயம், சோம்பு, சீரகம் - சிறிதளவு

கார்லிக் க்ரேவி

தேவையானவை :
கார்லிக் சாஸ் 4 டே.ஸ்பூன்
மிளகாய் வற்றல் 8
வெந்தயம் ¼ டீஸ்பூன்
துவரம் பருப்பு 1 டீஸ்பூன்
தக்காளிப்பழம் 2
கறிவேப்பிலை சிறிது
தூள் உப்பு தேவையானது
சின்ன வெங்காயம் 50 கிராம்
கடலைப்பருப்பு 2 டே.ஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
மல்லி(தானியா) 2 டே.ஸ்பூன்
மிளகு 6
அஜினமோட்டா 5 சிட்டிகை
புதுப்புளி எலும்மிச்சையளவு
ஜீரகம் 1/2 டீஸ்பூன்
வெ.உ.பருப்பு 1/2 டீஸ்பூன்
தேங்காய்ப் பூ 3 டே.ஸ்பூன்
கடுகு சிறிது
நல்லெண்ணெய் 100 மில்லி
முதலில்
1. ஒரு தம்ளர் வெந்நீரில் புளியைக் கரைத்து. 1 டீஸ்பூன் உப்பு கலந்து வைக்கவும்.
2. வாணலியில் 2 டே.ஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, மிளகு, பெருங்காயம், ஜீரகம், மல்லி, மிளகாய், கடைசியாக நறுக்கிய தக்காளிப்பழம் ஆகியவற்றைப் போட்டு வதக்கிக் கொண்டு தேங்காய்ப் பூ சேர்த்து, நைஸாக அரைத்து வைக்கவும்.
இப்படிச் செய்யவும்
1. கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, பாதி எண்ணெய ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, வெள்ளை உளுத்தம் பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுப் பொரித்துக் கொண்ட, சின்ன வெங்காயத்துடன் சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
2. மீதியுள்ள எண்ணெயை ஊற்றி அரைத்த மசாலா, கார்லிக் சாஸ், அஜினமோட்டோ ஆகியவற்றைச் சேர்த்து 5 நிமிடம் வதக்கி, தேவையான தண்ணீர் உப்பு சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்கவும். 10 நிமிடம் கழித்துப் பறிமாறவும்.

அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய அத்தியாவசிய கிச்சன் டிப்ஸ்

கைகளில் ஏற்படும் வாடையை போக்க
வெங்காயம் நறுக்கிய பிறகும், பூண்டு உரித்த பிறகும் கைகளில் ஏற்படும் வாடையை போக்க கைகளை stainless steel ஸ்பூன்களில் தேயுங்கள்.
பிரியாணி அடிப்பிடித்து விட்டால்...
பிரியாணி போன்ற மசாலா கலந்த அரிசி உணவுகளை செய்யும்போது, உணவு அடிப்பிடித்து விட்டால் அதன்மீது ஒரு பிரெட் துண்டினை வையுங்கள், தீய்ந்த வாசனை காணாமல் போய்விடும்.

பச்சைப்பயிறு கொத்துக்கறி செய்வது எப்படி?

 
பச்சைப்பயிறு - 200 கிராம்
தேங்காய் - 1
காய்ந்த மிளகாய் - 10
மல்லி - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி

பெண்களுக்கு புற்றுநோய் வருவதற்கு காரணங்கள்

 கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டால், வாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று ஆய்வு ஒன்று சொல்கிறது.

கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டால், வாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று ஆய்வு ஒன்று சொல்கிறது. ஏனெனில் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவதால், உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதால், அவை வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். வேண்டுமெனில், மாத்திரைகளுக்கு பதிலாக வேறு கருத்தடைப் பொருட்களை பயன்படுத்தினால், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை தவிர்க்கலாம்.

உடல் எடையைக் குறைப்பது எப்படி?

அதிக உடல் எடை தான் இன்று பலரையும் படுத்தி எடுக்கும் விஷயமாக இருக்கிறது.  எப்படித்தான் உடல் எடையைக் குறைப்பது என்று திணறித் தவித்துப் போகிறார்கள்.

அவர்களுக்கு உதவும், எளிய முறையில் உடல் பருமனைக் குறைக்கும் வழிகள் இவை...

* அன்றாடம் எளிதான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

* தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* உடல் பருமனை அதிரடியாகக் குறைக்கிறேன் பேர்வழி என்று கொலைப் பட்டினி கிடைக்கக்கூடாது.

இயற்கைப் பல்பொடி

அருகம்புல், மா இலை, கொய்யா இலை, நாயுருவி செடி, கரிசலாங்கண்ணி, பூவரசு இலை, வல்லாரை முதலிய இலைகளுள் கிடைப்பவற்றை சேகரித்து உலரவைத்து தூள் செய்து கொள்ளவும். 
 இதில் அரை கிலோ எடையளவு எடுத்து அதில் இரண்டு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து காய வைக்கவும். இதனுடன் உலர்ந்த துளசி இலை 250 கிராம், வாயுவிளங்கம் 100கிராம், மாசிக்காய் 100கிராம், தான்றிக்காய் 100கிராம், கடுகாய்த்தோல் 100கிராம், மகிழம்பட்டை 100கிராம், சுக்கு 100கிராம், கருவேலம்பட்டை 250கிராம், கருங்காலி 250 கிராம், ஆலம்விழுது 250கிராம், மாதுளை தோல் 250 கிராம், கிராம்பு 50 கிராம், இந்துப்பு 100 கிராம் முதலியவற்றை சேர்த்து மிஷினில் அரைத்துக் கொள்ளவும். இதுதான் இயற்கை பல்பொடி.

மர செக்கு எண்ணையின் மகத்துவம்

மர செக்கில் எண்ணெய் ஆட்டுவதில் அனுபவம் வாய்ந்த மதுரை, சமயநல்லூர், செந்தில்குமார் பதில் சொல்கிறார்.
''அந்தக் காலத்தில், மரத்தின் மூலம் செய்யப்பட்ட செக்கில், மாடுகள் மூலம்தான் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்... போன்றவற்றை ஆட்டினார்கள். காலப்போக்கில் கால்நடைகள் குறைந்து போனதாலும், மர செக்கின் மகத்துவம் தெரியாமல் போனதாலும், இந்தத் தொழில் நலிவடைந்து விட்டது. இந்த செக்குகளின் இடத்தை இயந்திரங்கள் (ரோட்டரி) பிடித்துவிட்டன. ஆனால், நாங்கள் பழையபடியே மர செக் மூலமாகவே தற்போதும் எண்ணெய் ஆட்டி வருகிறோம். மாட்டுக்குப் பதிலாக, மோட்டார் பொருத்தியிருக்கிறோம் அவ்வளவுதான். இப்படி மர செக்கில் எண்ணெய் ஆட்டும்போது, எண்ணெய் சூடேறாது. வாசனையும் மாறாமல் இருக்கும்.

இறைவழி மருத்துவம்

இறைவழி மருத்துவம் என்பது மருந்து இல்லாத மருத்துவம். மருத்துவ உதவி தேவைப்படாத மருத்துவம். மருத்துவத்தை இரண்டு கூறாகப் பிரிக்கலாம். இயற்கை மருத்துவம், செயற்கை மருத்துவம். இயற்கையிலே உற்பத்தி ஆகக்கூடிய தானிய வகைகள், தாவர வகைகள், கீரை வகைகள், மர வகைகள் இன்னும் பூமியிலே காணப்படுகின்ற கல், மண் முதற்கொண்டு அனைத்தும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. செயற்கை மருத்துவத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட, ரசாயனப் பொருட்களிலிருந்து மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இவையெல்லாம் தேவைதானா? உண்மையிலேயே இவைதான் நோய்களைக் குணப்படுத்துகின்றனவா? அல்லது இவற்றைச் சாப்பிட்டால் நோய் குணமாகும் என்று நம்புகிறாமோ, அந்த நம்பிக்கையால் நோய்கள் குணமாகின்றனவா? நாம் சிந்தித்துத் தெளிவடைய வேண்டியவர்களாக இருக்கிறோம்.
நாம் முதலாவதாக, நோய் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும். டயாபடீஸ் என்று சொல்கிறோம். கேன்சர் என்று சொல்கிறோம். இதைத்தான் நோய் என்று சொல்கிறோம். உண்மையில் டயாபடீஸ் என்பது நோயா? அல்லது அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிகமாகத் தாகம் எடுப்பது, அதிகமாகப் பசி எடுப்பது, உடல் மெலிந்துபோவது அல்லது உடல் குண்டாவது, அரிப்பு ஏற்படுவது இவற்றைத்தானே நோய் என்று சொல்ல முடியும். அதாவது, உடலில் ஏற்படும் கஷ்டங்களைத்தானே நோய் என்று சொல்ல முடியும். அதற்கு டயாபடீஸ் என்று பெயரிட்டது யார்? கேன்சர் என்று ஒரு வார்த்தையைச் சொல்கிறோம். ஆனால், உண்மையில் வயிற்றில் ஒரு புண் ஏற்படுகிறது அல்லது மூளையில் உள்ள தசையில் சிதைவுகள் ஏற்பட்டு தசையில் ஆங்கங்கே கொப்புளங்கள் ஏற்படுகின்றன. இதைத்தான் நாம் நோய் என்று சொல்ல முடியும்.

பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்


  1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
  2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
  3. பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
  4. நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

ரீஃபைண்ட் ஆயில்! – மெல்லக்கொல்லும் நஞ்சு!

ரீஃபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா?

ஆலையிலிருந்து பெறப்பட்ட எண்ணெயில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள். பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக், அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள். பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள். இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது.
 
திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால், “சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய்” என்று நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள்.

உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம். சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது.

மீன் பக்கோடா

மீன் பக்கோடா
தேவையான பொருட்கள்
சுறாமீன்-1/2 கிலோ, கடலைமாவு-150 கிராம், அரிசிமாவு-100 கிராம், சோளமாவு-50 கிராம், மைதா மாவு-50 கிராம், சோம்பு-1 ஸ்பூன், பட்டை-3, வெங்காயம்-3, பூண்டு-1, இஞ்சி-2 அங்குலம், எண்ணெய்-1/4 கிலோ, மஞ்சள் பொடி-1/2 ஸ்பூன், பச்சை மிளகாய்-6, மிளகாய் பொடி-1 ஸ்பூன், உப்பு-தேவையான அளவு.


மீனைக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும்.
இதனோடு வெங்காயத்தை நீளவாட்டில் அரிந்து சேர்க்கவும். இஞ்சி பூண்டு தோல் நீக்கித் தட்டிச் சேர்க்கவும். எல்லா மாவுகையும் ஒன்றாகக் கலந்து சேர்க்கவும். சோம்பு, பட்டை இடித்துச் சேர்க்கவும். உப்பு சேர்க்கவும். பச்சை மிளகாய் நறுக்கிச் சேர்க்கவும். மிளகாய் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து உப்பு சேர்த்து நீர் தெளித்து பிசறவும்.
எண்ணெய் புகைய காயவிட்டு தீயைக் குறைத்து கை நிறைய மாவை அள்ளிப் பிசறிவிட்டு பொன்னிறமாக மொரமொரப்பாக பொரித்துத் தூவவும்.
சுடசுட தக்காளி ரைஸோடு பரிமாறவும்.

டோஃபு - காய்கறி கேழ்வரகு சேவை


என்னென்ன தேவை?
ரெமிடக்ஸ் கேழ்வரகு சேவை-1பாக்கெட், நீளவாக்கில் மெலிதாக நறுக்கிய வெங்காயம்-கால் கப், பச்சைமிளகாய்-3, நறுக்கிய முளைக்கீரை- கால் கப், மெலிதாக, நீளவாக்கில் நறுக்கிய கேரட், காலிஃபிளவர், முட்டைக்கோஸ், குடமிளகாய் - தலா கால் கப், நறுக்கிய கொத்தமல்லி-1 டேபிள்ஸ்பூன், எண்ணெய்-வதக்குவதற்கு உப்பு- ருசிக்கேற்ப, டோஃபு (சோயா பனீர்) - 50 கிராம், எலுமிச்சை பழம் - 1

ஸ்டஃப்டு குடமிளகாய்


என்னென்ன தேவை?

குடமிளகாய்-3, பிரெட்-1 ஸ்லைஸ், நறுக்கிய வெங்காயம்-கால் கப், கேரட் - கால் கப், பட்டாணி - கால் கப், உரித்த மக்காளச் சோளம் - கால் கப், காலிஃபிளவர் - கால் கப், நறுக்கிய முளைக்கீரை -அரை கப், இஞ்சி - மிளகாய் விழுது - 1 டீஸ்பூன், உப்பு -ருசிக்கேற்ப, நறுக்கிய கொத்தமல்லி - கால் கப், எலுமிச்சம் பழம் -1, மஞ்சள் தூ்ள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - சிறிது.

கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்!

பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். 

கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக தொடர்ந்து 120 நாட்கள் சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?

இளமையோடு நீண்ட நாட்கள் வாழ

இளமையோடு நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று விரும்பும் உங்களுக்காக,  மூப்பைத் தள்ளிப் போட முத்தான குறிப்புகள் இதோ…

1.   ‘ஆன்ட்டி ஏஜிங்’ என்றாலே, ‘ஆன்டி ஆக்ஸிடன்ட்’தான் நினைவுக்கு வர  வேண்டும்.   வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்), சி மற்றும் இ, துத்தநாகம்,  செலினியம் இவை  அனைத்தையுமே, ஆன்டி ஆக்ஸிடன்ட் என்கிறது நவீன அறிவியல்.  இந்தச் சத்துக்கள்  நிரம்பிய காய்கள், பழங்கள், தானியங்களை எடுத்துக்  கொள்ளும்போது, உங்கள்  முதுமையை இன்னும் கொஞ்சம் தள்ளிப் போடலாம்.
 2.   நெல்லிக்காயில்தான், வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு   நெல்லிக்காய், தேனில் ஊற வைத்த சிறு துண்டு இஞ்சியை, எடுத்துக்  கொள்ளுங்கள்.

எண்ணெய் தேய்த்து குளி

எண்ணெய் தேய்த்து குளிக்கும் ஒரு அற்புதமான வாழ்வியல் மருத்துவ முறையைப் பற்றியதுதான் இந்த கட்டுரை.

எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் உங்கள் வீட்டில் இல்லையா?, அப்படியானால் நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழவில்லை என்று நிச்சயமாக சொல்ல முடியும். அந்த அளவுக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது ஒரு ஆரோக்கிய செயல்முறை.

எண்ணெய் தேய்த்து குளிப்பது என்றால் என்ன?

“இது எங்களுக்கு தெரியாதாக்கும்…… எண்ணெயை தேய்க்கனும் அப்புறம் குளிச்சிரனும்… அவ்வளவுதான்… இதென்ன பெரிய விடயமா? இதுக்கு ஒரு கட்டுரையா…. ?” … என முடித்துவிடும் விடயமல்ல இது. பல கோடி ரூபாய் செலவு செய்து பதினைந்து வருடம் ஆராய்ச்சி நடத்தலாம், அவ்வளவு விடயங்கள் உள்ளன.

சமையல் குறிப்பு


கேரட்டை மொத்தமாக வாங்கி  வந்து விட்டு, சீக்கிரம் காய்ந்து போய் விட்டதே என்று கவலைப்பட  வேண்டாம். கேரட்டின் தோலை சீவி, அதன் நுனி மற்றும் அடி பாகத்தை வெட்டிவிடுங்கள். இதனை ஒரு பிளாஸ்டிக் டாப்பாவில் போட்டு டைட்டாக மூடி ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால், வாரக்கணக்கில் கேரட்டுகள் ஃப்ரெஷ்ஷ இருக்கும் .

                                                                                      

ஆரோக்கிய கழிப்பறை

காலை எழுந்தவுடனும் இரவு படுக்கச் செல்வதற்கு முன்னும், நாம் பயன்படுத்துவது கழிப்பறை. இதைப் பற்றி பேசுவதற்குப் பலரும் முகம் சுளிக்கலாம். ஆனால், கழிப்பறைகளில்தான் நம் ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது. 
“இயல்பாகக் கிடைத்த நல்ல விஷயங்களையும் நாகரிகத்தின் பெயரால் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். அதில் கழிப்பறைகளும் அடக்கம்” என்கிறார் லாவண்ய சோபனா திருநாவுக்கரசு. இவர் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் இரா. திருநாவுக்கரசின் மனைவி. 

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் ‘பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம்’ குறித்து முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டுவருகிறார். கழிப்பறை ஆரோக்கியம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டது: 

மிளகின் மகத்துவம்



பண்டைய காலத்தில் வெளிநாட்டு வர்த்தகர்கள் இந்தியா வந்து மிளகுகளை வாங்கிச் சென்றார்கள். அவர்கள் அதை பெருஞ்செல்வம் போல் மதித்தார்கள். 15ம் நூற்றாண்டிற்கு பின்பே தென்அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு மிளகாய் அறிமுகம் ஆனது. அதற்கு முன்பு உணவில் காரம் சேர்ப்பது என்றால் மிளகு தான்.

ஆரேக்கிய சூப்

எனனெனன தேவை?
சிறியதாக நறுக்கிய காய்கறிக்ள்... வெங்காயம் - 1, உரித்த பூண்டு -2 பல், கேரட் -2, பீன்ஸ் -1பிடி, முட்டை கோஸ் -4 தழை, குடமிளகாய் -1, வெங்காயத்தாள் -சிறிது, துண்டு, தக்காளி -2, கொத்தமல்லி - சிறிது. தோல் உரித்து அரைத்த பாதாம் -5, உப்பு தேவைக்கேற்ப, மிளகுப்பொடி -சிறிது, பால் - அரை கப். வெண்ணெய்- கோலி அளவு, சர்க்கரை - 2 சிட்டிக்கை.

எப்படிச் செய்வது?
நறுக்கிய காய்கள் பாதாம் விழுது முதலியவற்றை உப்பு, மிளகுப்பொடி, சர்க்கைரை, தேவையான நீர் விட்டு குக்கரில் 2 விசில் வரை வேக விட வேண்டும். பிறகு ஆறியதும் வடிகட்டி, வெந்தவற்றை மிக்சியில் அரைக்க வேண்டும். பரிமாறும் முன் வடிகட்டிய நீருடன் சேர்த்து கொதிக்க வைத்து சிறிய பால் கலந்து சூடாக சூப் கிண்ணத்தில் விட்டு, அதன்மேல் சிறிது வெண்ணெயை மிதக்கவிட்டு கொடு்க்கலாம். விருப்பப்பட்டால் வறுத்த ரொட்டித்துண்டுகளை மேலே தூவலாம்.

என்ன சிறப்பு?
நார்ச்சத்துள்ள ஹெல்த்தி சூப் இது.
உடல்நலமில்லாதவர்கள் இதை ஆகாராமாகவே எடுத்துக்கொள்ளலாம்.
 -ஆர்.உஷா,சென்னை- 28.


சமையலில் செய்யக்கூடாத சில காரியங்கள்....!


* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.