அதிக உடல் எடை தான் இன்று பலரையும் படுத்தி எடுக்கும் விஷயமாக இருக்கிறது. எப்படித்தான் உடல் எடையைக் குறைப்பது என்று திணறித் தவித்துப் போகிறார்கள்.
அவர்களுக்கு உதவும், எளிய முறையில் உடல் பருமனைக் குறைக்கும் வழிகள் இவை...
* அன்றாடம் எளிதான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
* தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
* உடல் பருமனை அதிரடியாகக் குறைக்கிறேன் பேர்வழி என்று கொலைப் பட்டினி கிடைக்கக்கூடாது.

* நொறுக்குத் தீனிகளைத் தள்ளி வைக்க வேண்டும். இன்று மட்டும் சாப்பிடுகிறேன் என்று நினைத்தால், என்றுமே அவற்றுக்கு விடைகொடுக்க முடியாது.
* உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
* இனிப்புகள், சர்க்கரை வகைகளை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.
* எண்ணையில் வறுத்த, பொரித்த உணவுகளைத் தவிர்த்து, வேகவைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
* முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்த்து, வெள்ளைப் பகுதியை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
* செயற்கைக் குளிர்பானங்களுக்கு நமக்கு நாமே தடை விதித்துக்கொள்ள வேண்டும்.
* தினமும் பழங்கள் சாப்பிடலாம்.
* அவரை, பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ், காலி பிளவர், முருங்கைக்காய், புடலங்காய், சுரைக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வெள்ளரிக்காய் இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் இரவு உணவுடன் 200 கிராம் அளவுக்குச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை கீரை, தட்டைப்பயறு, பச்சைப்பயறு போன்ற பயறு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.

* கைக்குத்தல் அவல், முழுக் கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அவ்வப்போது உட்கொள்ள வேண்டும்.
* கொழுப்புச் சத்துள்ள உணவுப்பொருட்களைத் தவிர்த்தல் மிகவும் நல்லது. பாலில் கூட குறைந்த கொழுப்புச் சத்து உள்ள டோன்டு மில்க் வகைகளையே பயன்படுத்தலாம்.
* வேலைக்காரர்கள், எந்திரங்களை அதிகம் சார்ந்திருக்காமல், வீட்டு வேலைகளை நாமே செய்யலாம். உடல் ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம். வீட்டு வேலைகளை நாமே பார்த்த திருப்திக்குத் திருப்தி
* அசைவ விரும்பிகள், அவற்றின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். பொரிப்பது, வறுப்பது தவிர்த்து, தந்தூரி வகைக்கு மாறலாம்.
No comments:
Post a Comment