ஆரேக்கிய சூப்

எனனெனன தேவை?
சிறியதாக நறுக்கிய காய்கறிக்ள்... வெங்காயம் - 1, உரித்த பூண்டு -2 பல், கேரட் -2, பீன்ஸ் -1பிடி, முட்டை கோஸ் -4 தழை, குடமிளகாய் -1, வெங்காயத்தாள் -சிறிது, துண்டு, தக்காளி -2, கொத்தமல்லி - சிறிது. தோல் உரித்து அரைத்த பாதாம் -5, உப்பு தேவைக்கேற்ப, மிளகுப்பொடி -சிறிது, பால் - அரை கப். வெண்ணெய்- கோலி அளவு, சர்க்கரை - 2 சிட்டிக்கை.

எப்படிச் செய்வது?
நறுக்கிய காய்கள் பாதாம் விழுது முதலியவற்றை உப்பு, மிளகுப்பொடி, சர்க்கைரை, தேவையான நீர் விட்டு குக்கரில் 2 விசில் வரை வேக விட வேண்டும். பிறகு ஆறியதும் வடிகட்டி, வெந்தவற்றை மிக்சியில் அரைக்க வேண்டும். பரிமாறும் முன் வடிகட்டிய நீருடன் சேர்த்து கொதிக்க வைத்து சிறிய பால் கலந்து சூடாக சூப் கிண்ணத்தில் விட்டு, அதன்மேல் சிறிது வெண்ணெயை மிதக்கவிட்டு கொடு்க்கலாம். விருப்பப்பட்டால் வறுத்த ரொட்டித்துண்டுகளை மேலே தூவலாம்.

என்ன சிறப்பு?
நார்ச்சத்துள்ள ஹெல்த்தி சூப் இது.
உடல்நலமில்லாதவர்கள் இதை ஆகாராமாகவே எடுத்துக்கொள்ளலாம்.
 -ஆர்.உஷா,சென்னை- 28.


No comments:

Post a Comment