அருகம்புல், மா இலை, கொய்யா இலை, நாயுருவி செடி, கரிசலாங்கண்ணி, பூவரசு இலை, வல்லாரை முதலிய இலைகளுள் கிடைப்பவற்றை சேகரித்து உலரவைத்து தூள் செய்து கொள்ளவும்.
இதில் அரை கிலோ எடையளவு எடுத்து அதில் இரண்டு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து காய வைக்கவும். இதனுடன் உலர்ந்த துளசி இலை 250 கிராம், வாயுவிளங்கம் 100கிராம், மாசிக்காய் 100கிராம், தான்றிக்காய் 100கிராம், கடுகாய்த்தோல் 100கிராம், மகிழம்பட்டை 100கிராம், சுக்கு 100கிராம், கருவேலம்பட்டை 250கிராம், கருங்காலி 250 கிராம், ஆலம்விழுது 250கிராம், மாதுளை தோல் 250 கிராம், கிராம்பு 50 கிராம், இந்துப்பு 100 கிராம் முதலியவற்றை சேர்த்து மிஷினில் அரைத்துக் கொள்ளவும். இதுதான் இயற்கை பல்பொடி.
இந்த பல்பொடி மிருதுவான சுவையுடன் இருக்கும். மிகவும் காட்டமான சுவையுடன் இருக்க வேண்டும் என்று விரும்பினால் எலுமிச்சம்பழம், உப்பு, சுக்கு முதலியவற்றை சிறிது அதிகரித்துக் கொள்ளலாம். தொண்டைப் புண்களுக்கு உப்புத் தண்ணீரைக் கொப்பளித்தால் குணமாகின்றது. எனவேதான் இங்கு பல்பொடியில் சிறிது உப்பு சேர்க்கின்றோம். ஆலம் என்ற படிகாரத்தை 250 கிராம் அளவு இந்த பல்பொடி தயாரிக்கும்பொழுது சேர்த்துக்கொண்டால் மிகவும் நல்லது என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குறைந்த அளவு தேவை இருப்போர் அதற்கு தகுந்தவாறு பொருட்களின் அளவை குறைத்துக்கொள்ளவும்.
வல்லாரையும் அதன் பயன்களும்
நாட்டுக்கோழிக் குழம்பு - ஆந்திரா ஸ்டைல்
உடல் எடையைக் குறைப்பது எப்படி?
இயற்கைப் பல்பொடி
வல்லாரையும் அதன் பயன்களும்
நாட்டுக்கோழிக் குழம்பு - ஆந்திரா ஸ்டைல்
உடல் எடையைக் குறைப்பது எப்படி?
இயற்கைப் பல்பொடி
No comments:
Post a Comment